News August 23, 2025
RSS-யிடம் விஜய் பாடம் படிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

ஒழுக்கமாக மாநாடு நடத்துவது குறித்து இந்து, RSS அமைப்புகளிடமும் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். TVK-ன் 2-வது மாநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற மாநாடு போல் இருந்ததாகவும் விமர்சித்தார். மேலும், வரும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளை மட்டுமே தவெக பெறும் என்றும், மநீம., போல் விரைவில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News March 15, 2026
விஜய்க்கு NDA கொடுத்த ஆஃபர்.. அரசியல் பரபரப்பு

2026 பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு 80 சீட்டுகள் மற்றும் துணை முதல்வர் பதவியை வழங்க அதிமுக தலைமையிலான NDA கூட்டணி முன்வந்துள்ளதாக சற்றுமுன் India Today நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று தனியார் செய்தி நிறுவனத்தில் <<19385898>>நிகழ்ச்சியில் பேசிய EPS<<>>, விஜய் உடன் எந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார். ஆனால், டெல்லி பாஜகவினர் விஜய் தரப்பிடம் தீவிரமாக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 15, 2026
கேஸ்.. பெர்சிய பகுதியில் இந்திய போர் கப்பல்கள்

LPG வாயுவை சுமந்துவரும் ஷிவாலிக், நந்தாதேவி ஆகிய 2 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்துவிட்டன. 2 கப்பல்களுக்கு மார்ச் 21-ம் தேதி இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்திய போர் கப்பல்கள் பெர்சிய வளைகுடா அருகே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News March 15, 2026
EPS-ஐ மட்டுமே டார்கெட் செய்கிறாரா திமுகவின் OPS?

3 முறை அதிமுக CM, கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த OPS, சமீபத்தில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து, தனது பிரசாரத்தையும் தென்மாவட்டங்களில் இருந்து தொடங்கியுள்ளார். ஆனால், அதிமுக கூட்டணியோ (அ) திமுகவின் சாதனைகளையோ அவர் பெருமளவில் குறிப்பிட்டு பேசவில்லை. அதேநேரம், அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தை முன்னிறுத்தி <<19380159>>EPS<<>>-ஐ மட்டுமே பகிரங்கமாக OPS விமர்சித்து வருவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.


