News September 26, 2025
28-ம் தேதி ட்ரீட் கொடுக்கும் விஜய் சேதுபதி!

தலைவன் தலைவி படத்திற்கு பிறகு, விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தை தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் வரும் 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடிக்க, தபு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
Similar News
News September 26, 2025
சனியன்களை சேர்த்து சட்டை தைத்தார் விஜய்: சீமான்

திமுகவிலிருந்து 2 இட்லியும், அதிமுகவில் இருந்து 2 தோசையும் எடுத்த விஜய், அதை பிச்சுபோட்டு உப்புமாவை கிளறுவதாக சீமான் கூறியுள்ளார். மேலும், திமுக, அதிமுகவை சனியன் என குறிப்பிட்ட அவர், 2 சனியன்களையும் சேர்த்து சட்டை தைத்து, சனிக்கிழமை பிரசாரத்துக்கு விஜய் செல்கிறார் என காட்டமாக விமர்சித்துள்ளார். இதனால், மாற்றம் என்ற சொல்லுக்கும் விஜய்க்கும் சம்மந்தமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News September 26, 2025
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சிறந்த உணவுகள்

கல்லீரல் கழிவுப் பொருள்களை உடலில் இருந்து வெளியேற்றவும், செரிமானம், உயிரணு உற்பத்தி ஆகிய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்வாழ்வுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலே, கல்லீரலுக்கான சிறந்த உணவுகளை போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News September 26, 2025
Stock Market பங்குகள் விலை கடும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இந்த வாரம் சோதனை காலமாக அமைந்துள்ளது. இன்று தொடர்ந்து 6-வது நாளாக சென்செக்ஸ் 733 புள்ளிகள் சரிந்து 80,426 புள்ளிகளுடனும், நிஃப்டி 236 புள்ளிகள் சரிந்து 24,654 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை கண்டுள்ளதால், முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடியை இழந்துள்ளனர்.