News June 29, 2024
ராம்கோபால் வர்மா படத்தில் விஜய் சேதுபதி

சூர்யாவின் ரத்த சரித்திரம், அமிதாப் பச்சனின் சர்க்கார் உள்ளிட்ட பல இடங்களை இயக்கிய சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா, சென்னையில் அண்மையில் விஜய் சேதுபதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை அடுத்து, அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பிறகு அறிவிக்கப்பட இருப்பதாகத் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 21, 2025
நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

2021 தேர்தல் போலவே 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.
News November 21, 2025
லேட்டஸ்ட் கிரஷ் கீர்த்தி சனோன்

முன்னணி பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சனோன், அழகு, நடிப்பு, நடனம் என அனைத்து ஏரியாவிலும் மகுடம் சூடியுள்ளார். ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ள கீர்த்தி சனோன், ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷாக வலம் வருகிறார். இவர், சமீபத்தில் இன்ஸ்டாவில் பதிவிட்ட போட்டோக்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 21, 2025
BREAKING: விஜய் அதிரடி முடிவு

கரூர் அசம்பாவிதத்தை போல் இனி எப்போதும் நடந்துவிடக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளாராம். இந்நிலையில், தவெகவில் உருவாக்கப்பட்ட தொண்டரணிக்கான பயிற்சி, கடந்த சில நாள்களாக சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது. டிசம்பரில் விஜய் மீண்டும் பரப்புரையை தொடங்கவுள்ள நிலையில், நவ.23-ல் பயிற்சி பெறும் தொண்டரணிக்கு விஜய் நேரடியாக அறிவுரை வழங்கவுள்ளாராம்.


