News September 20, 2025
ரசிகர் கூட்டம் குற்றச்சாட்டுக்கு விஜய் பதிலடி

விஜய்க்கு கூடுவது ரசிகர் கூட்டம் என்றும், அந்த கூட்டம் வாக்காக மாறாது என்றும் திமுக, அதிமுக, பாஜக கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், இது சும்மா கூடிய கூட்டமல்ல, வாக்களிக்கும் கூட்டம் தான் என்று தொண்டர்களின் கோஷத்தை பதிலடியாக கொடுத்திருக்கிறார் விஜய். திருவாரூர் பரப்புரையில் பேசிய அவர், குடும்ப ஆதிக்கம் இல்லாத, ஊழலில்லாத தமிழகத்தை நோக்கியே நமது பயணம் என்றும் சூளுரைத்தார்.
Similar News
News September 20, 2025
விவசாயிகள் வயிற்றில் அடித்து ₹40 கமிஷன்: விஜய்

நெல் கொள்முதலில் திமுக அரசு கோடிக்கணக்கில் கமிஷன் அடிப்பதாக விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் பேசிய அவர், ஒரு நெல் மூட்டைக்கு ₹40 கமிஷன் அடித்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துள்ளதாக விமர்சித்துள்ளார். 40-40 தொகுதி வெற்றி என கணக்கு போட்ட திமுக, தற்போது விவசாயிகளின் வயிற்றில் அடித்து ₹40 கமிஷன் பெறுவதாகவும் ஆவேசமாக பேசினார்.
News September 20, 2025
சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின் அடிப்படையில் <<17774785>>நாளை சூரிய கிரகணத்தின்<<>> போது செய்ய வேண்டியவை: *கடவுளை தியானிக்கவும் *கிரகணத்தின் போது உங்கள் ஆற்றலை சேமிக்க வீட்டிலேயே இருக்கவும் *மந்திரங்களை உச்சரிக்கலாம், ராமாயணம், பகவத் கீதை நூல்களை பாராயணம் செய்யலாம் *கடவுள் சிலைகளை மூடி வைக்கவும் *கிரகணத்துக்குபின் அனைத்து இடங்களிலும் கங்கை தீர்த்தத்தை தெளித்து, உங்கள் ஆராவை தூய்மையாக்குங்கள். பின் குளிக்கவும். SHARE IT.
News September 20, 2025
தனுஷை இயக்கும் ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து

‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து தனது அடுத்த படத்தின் அப்டேட்டை பகிர்ந்துள்ளார். ‘லப்பர் பந்து’ படம் வெளியாகி ஒராண்டை நிறைவு செய்திருக்கும் நிலையில், அதற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது அடுத்த படத்தின் ஹீரோ தனுஷ் என்றும் நடிப்பு அசுரனுக்கு ஆக்ஷன், கட் சொல்ல காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.