News March 13, 2025
மா.செ பட்டியலை வெளியிடுகிறார் விஜய்

தவெக இறுதிக்கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிடுகிறார். நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரித்துள்ள அவர், அதற்கு செயலாளர்களையும் அறிவித்து வருகிறார். ஏற்கெனவே, 95 மா.செ.கள் பட்டியல் வெளியான நிலையில், மீதமுள்ள மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் அந்த மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து, அவர் பொறுப்புகளை வழங்குவார் எனத் தெரிகிறது.
Similar News
News March 13, 2025
மகளிருக்கு மாதம் ₹2,500 கொடுப்போம்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்தால் மகளிருக்கு மாதம் ₹2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்துள்ளாா். ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும், அதற்கு காமராஜர் பெயர் வைக்கப்படும் எனவும், கல்வி மற்றும் மருத்துவ துறையில் உயர்ந்த தரம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
News March 13, 2025
போஸ்ட் ஆபிஸ் ATMகளால் அவதி

அவதியடைந்துள்ளனர். போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ATM கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாக எந்த ATM-ம் செயல்படவில்லை. மாற்று ATMகளில் பணம் எடுத்தால், பணம் பிடித்தம் செய்யப்படுவதாக மக்கள் புகாரளித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, பணம் நிரப்பும் ஏஜென்சிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பணம் நிரப்பவில்லை என்றனர்.
News March 13, 2025
தினமும் நீங்க சிக்கன் சாப்பிடுறீங்களா?

சிக்கன் பிடிக்காத அசைவ பிரியர்களே இருக்க முடியாது. ஆனால், தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து எலும்பு, மூட்டு பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதயநோய் வர வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.