News October 6, 2025
கைது நடவடிக்கைக்கு தயாராகும் விஜய்

கரூர் சம்பவத்தில், விஜய் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என மெட்ராஸ் HC கேள்வி எழுப்பிய நிலையில், கைது நடவடிக்கையை எதிர்கொள்ள அவர் தயாராக உள்ளாராம். N.ஆனந்த், நிர்மல்குமாருக்கு மேல்முறையீட்டில் சாதகமான முடிவு வராத பட்சத்தில் டிஜிபி ஆபீசை முற்றுகையிட்டு, தன்னையும் கைது செய்யுங்கள் என்று முறையிட விஜய் திட்டமிட்டுள்ளாராம்.
Similar News
News October 6, 2025
BREAKING: அப்போலோவுக்கு சென்றார் அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை கேட்டவுடன் சற்றுமுன் அப்போலோவுக்கு நேரில் சென்ற அன்புமணி, ராமதாஸிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
News October 6, 2025
பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது. rteadmission@tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பள்ளிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. RTE அடிப்படையில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் முழுக் கல்விச் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாதீங்க.
News October 6, 2025
பாகிஸ்தானுக்கு சரியான அடி: அமித்ஷா

மகளிர் உலகக் கோப்பையில் 88 ரன்களை வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். பாகிஸ்தானுக்கு சரியான அடி கொடுத்து, இந்திய மகளிர் அணி தனது வலிமையை வெளிப்படுத்தியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் இந்திய அணியை நினைத்து தேசமே பெருமைப்படுவதாகவும், அடுத்த வரும் போட்டிகளுக்கும் வெற்றிபெற வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.