News August 11, 2024
மோடி, ஜெயலலிதா சென்டிமென்டில் விஜய்

பிரதமர் மோடி, ஜெயலலிதா வெற்றி சென்டிமென்ட் காரணமாக திருச்சியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்ததாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர். 2014ல் முதன்முதலில் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிமுகம் செய்யும் மாநாடு திருச்சியில் நடந்தது. ஜெ., 2010ல் திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்தியதில் கிடைத்த எழுச்சியால் 2011, 2016ல் வெற்றி பெற்றார். இதனால் திருச்சியை விஜய் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
Similar News
News October 23, 2025
திமுக தலைவர்களின் பதவி பறிப்பு

ஒரே நாளில் திமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. திட்டக்குடி நகராட்சி தலைவர் வெண்ணிலா தனது சொந்த கட்சி கவுன்சிலர்களாலேயே தோற்கடிக்கப்பட்டு பதவியை இழந்தார். அதேபோல், சொத்து வரி சர்ச்சையில் சிக்கிய ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செயல் அலுவலர் வெங்கடகோபு அறிவித்துள்ளார்.
News October 23, 2025
ஷ்ரேயஸ் ஐயர் FIFTY!

இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் 67 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். தொடக்கத்திலேயே கில் & கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. பின்னர் ரோஹித்தும், ஷ்ரேயஸும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து நம்பிக்கையூட்டினர். இந்திய அணி தற்போது வரை 28.2 ஓவர்களில் 130/2 ரன்களை எடுத்துள்ளது.
News October 23, 2025
மோசமான சாதனையை படைத்தார் விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ODI ஆட்டத்திலுமே விராட் கோலி டக் அவுட் ஆனார். இதன்மூலம், கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக டக் வாங்கிய இந்திய வீரர்கள் பட்டியலில் 40 டக் அவுட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார் விராட் கோலி. இதனால், 2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவரது ரசிகர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.