News February 16, 2025
விஜய்க்கு பாதுகாப்பு தேவைதான்: குஷ்பு சுளீர்

விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்பு தேவைதான். தற்போது அவர் அரசியலில் இருப்பதால் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என குஷ்பு கூறினார்.
Similar News
News December 3, 2025
இந்த நாள்களை மறந்துடாதீங்க!

விஜய் ஹசாரே தொடரில் வரும் 24-ம் தேதி ஆந்திரா, 26-ம் தேதி குஜராத், ஜனவரி 6-ம் தேதி ரயில்வே ஆகிய அணிகளுக்கு எதிராக டெல்லி வீரராக கோலி களமிறங்குகிறார். கடைசியாக 2010-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் கோலி விளையாடி இருந்தார். முன்னதாக, 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்து கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவருக்கு BCCI அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ₹90.14 ஆக சரிவு

டாலருக்கு($) நிகரான ரூபாயின்(₹) மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹90.14 ஆக சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் ₹86.45 ஆக இருந்த ₹ மதிப்பானது பல மாதங்களாக பெரிய அளவில் மாற்றமின்றி நீடித்தது. ஆனால், தற்போது USA வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் சரிவை கண்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருள்களுக்கான செலவு இந்தியாவில் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
News December 3, 2025
TN-ல் இந்தி கற்க முடியவில்லை: எல்.முருகன்

தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை காரணமாக தன்னால் இந்தி கற்க முடியவில்லை என எல்.முருகன் கூறியிருக்கிறார். இதனால் டெல்லி சென்ற பிறகுதான் இந்தி கற்றதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் அந்த வாய்ப்பு தனக்கு மறுக்கப்பட்டது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்தி கற்பது தன்னுடைய உரிமை எனவும் ஆனால், மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கிறது என்று கூறி தமிழகம் அதனை எதிர்க்கிறது என்றும் அவர் பேசியுள்ளார்.


