News October 13, 2025
விஜய் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்: TKS இளங்கோவன்

விஜய் ஏன் 7.5 மணி நேரம் தாமதமாக வந்தார் என்பதற்கு இன்னும் தவெக தரப்பில் பதில் அளிக்கவில்லை என டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். விஜய் சொன்ன நேரத்துக்கு கரூர் சென்றிருந்தால் அசம்பாவிதமே நடந்திருக்காது எனவும், 41 உயிர்கள் பறிபோனதற்கு முக்கிய காரணம் தவெகதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தாமதத்திற்கான காரணம் குறித்து அவர் பதில் சொல்லும் வரை விடப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News October 13, 2025
சரியும் நிதிஷின் செல்வாக்கு

பிஹாரில் NDA கூட்டணியின் <<17987443>>தொகுதி பங்கீட்டை<<>> கவனித்தீர்களா? கடந்த முறை 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷின் JDU-யும், 110 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும் இம்முறை குறைந்து, தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சியவற்றில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இது நிதிஷின் சரிந்துவரும் செல்வாக்கை காட்டுகிறது. இந்த முறை பாஜக அதிக இடங்களில் வென்றால், நிதிஷ் CM நாற்காலியில் தொடர்வது சந்தேகம் தான்.
News October 13, 2025
பிக் பாஸை விமர்சிப்பதால் எந்த பலனும் இல்லை: விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9, அக்.5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வீட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் பாரபட்சம் காட்டப்பட்டதாக நடிகை ஆதிரை குற்றம்சாட்டியிருந்தார். இதை தொடர்ந்து பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை என போட்டியாளர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி அறிவுரை வழங்கியுள்ளார். நிகழ்ச்சியின் விதிகளுக்குட்பட்டு விளையாடும்போதே மக்களுக்கு சுவாரசியம் ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
News October 13, 2025
தீபாவளி ஸ்பெஷல்: உதிராம அதிரசம் செய்ய இத பண்ணுங்க!

தீபாவளி ஸ்வீட்னாலே முதலில் நினைவுக்கு வருவது அதிரசம் தான். ஆனா, அதிரசம் செய்யும்போது சரியாகவே வராது. ஒன்னு உடைஞ்சுரும், இல்ல உதிரும். அத சரி செய்ய சில விஷயங்கள கவனிச்சா போதும். அது என்னென்ன? அதிரசம் செய்வது எப்படினு மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…