News August 5, 2024
சூப்பர் ஹிட் படங்களை தவற விட்ட விஜய்

நடிகர் விஜய் வளர்ந்து வந்த காலத்தில் தவற விட்ட ஐந்து சூப்பர் ஹிட் படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த ‘தீனா’, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த ‘முதல்வன்’, தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தூள்’, ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சிங்கம்’, லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ ஆகிய படங்களை விஜய் தவறவிட்டுள்ளார்.
Similar News
News March 14, 2026
லெனின் பொன்மொழிகள்

▶பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை. ▶நம்பிக்கை நல்லதுதான். ஆனால் கட்டுப்பாடு சிறந்தது. ▶நீ விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே; நீ விரும்புவதை உலகம் எதிர்த்தாலும் செய்து முடி. ▶தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். ▶பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.
News March 14, 2026
விஜய்யின் ஒப்புதல் இன்றி இது நடைபெறாது: துரை வைகோ

எடுத்த முடிவில் உறுதியாக இருந்தால்தான், மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் என விஜய்க்கு துரை வைகோ அறிவுறுத்தியுள்ளார். திமுக, பாஜகவை எதிரி எதிர்த்துதான் அரசியலுக்கு வந்ததாக விஜய் கூறினார்; ஆனால் திடீரென தவெக மா.செ கூட்டத்தைக் கூட்டி, அவர்கள் கூட்டணி விரும்புவதாக கூறுவது தலைமையின் ஒப்புதல் இல்லாமல் நடைபெறாது என்பதையே காட்டுகிறது என்றும், விஜய்யின் முடிவு காலப்போக்கில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.
News March 14, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 632 ▶குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. ▶பொருள்: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.


