News September 27, 2025

விஜய் குறிப்பிட்ட முதல்வர் ப.சுப்பராயன்

image

இன்று தனது பிரசாரத்தில் விஜய், இடஒதுக்கீடு ஆணையை பிறப்பித்த CM என்று நாமக்கல்லை சேர்ந்த ப.சுப்பராயனை குறிப்பிட்டார். 1926-ல் மெட்ராஸ் மாகாண CM-மாக பதவி வகித்தவர் ப.சுப்பராயன். விஜய் கூறிய அரசாணையின்படி (Communal G. O. 1071), அரசு வேலை & கல்வி வாய்ப்புகளில் பிராமணரல்லாதோருக்கு 5/12 பங்கு, பிராமணர், ஆங்கிலோ இந்தியர், முஸ்லீம்களுக்கு தலா 2/12, தாழ்த்தப்பட்டோருக்கு 1/12 பங்கும் ஒதுக்கப்பட்டது.

Similar News

News January 8, 2026

விஜய்யை மீண்டும் கூட்டணிக்கு அழைத்த தமிழிசை

image

அதிமுக – பாஜக கூட்டணியில் பாமகவை தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். விஜய் NDA-வில் சேரும் போது தான் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எப்படி NDA-வில் உள்ள கட்சிகளுக்கு திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கிறதோ, அதே பொறுப்பு விஜய்க்கும் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 8, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 8, மார்கழி 24 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்:6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்

News January 8, 2026

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: புதிய தமிழகம்

image

மதுரையில் கிருஷ்ணசாமி தலைமையில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் திராவிட மாயை ஆட்சிக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொள்ள வேண்டும், காசுக்கு ஓட்டு போடும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு தலா 2.5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் அடக்கம்.

error: Content is protected !!