News January 11, 2025
BREAKING: பரந்தூர் மக்களை சந்திக்கிறார் விஜய்

பரந்தூர் மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் பல அடக்குமுறைகளை கடந்து 900வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின், முதல்முறையாக இதுபோன்ற முக்கிய பிரச்னைகளில் மக்களுக்கு ஆதரவாக விஜய் நேரடியாக களத்தில் இறங்கவுள்ளார். ஜன.19 (அ) ஜன.20இல் அனுமதி தரக்கோரி தவெக சார்பில் போலீசாரிடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 19, 2026
திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 19.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News January 19, 2026
டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்கு தற்போதைய செயல் தலைவராக இருக்கும் நிதின் நபின் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். இதனால், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், கட்சித் தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை விரைந்துள்ளார்.
News January 19, 2026
தீ பரவட்டும் என்றால் நடுங்குகின்றனர்: உதயநிதி

அண்ணா பற்ற வைத்த அறிவுத் தீ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறதாக சென்னை புத்தகக் காட்சியில் நடைபெற்று நிகழ்ச்சியில் DCM உதயநிதி தெரிவித்துள்ளார். மேலும் ‘தீ பரவட்டும் என்று சொன்னால்’ இன்றைக்கும்கூட சிலர் பயந்து நடுங்குவதாக குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் இடம்பெற்ற தீ பரவட்டும் என்ற வார்த்தையை தணிக்கை குழு நீக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


