News January 24, 2025
நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கும் விஜய்

மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட உள்ள நிர்வாகிகளை விஜய் தனித்தனியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்களை நியமிக்கும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று அரியலூர், சென்னை, செங்கல்பட்டு, கோவை, தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களின் செயலாளர்களை தனித்தனியாக சந்திக்கும் விஜய், அவர்களிடம் பதவிக்கு பணம் வாங்கப்பட்டதா என்பது குறித்தும் கேட்டறிய உள்ளார்.
Similar News
News December 18, 2025
தீக்குளித்து உயிரிழந்த பக்தர்: அண்ணாமலை வருத்தம்

மதுரை, நரிமேடு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடை செய்த திமுக அரசை கண்டித்து பூர்ண சந்திரன் என்ற முருக பக்தர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். வழக்கு கோர்ட்டில் உள்ளது, கோர்ட் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல
News December 18, 2025
நிதிஷ் ஹிஜாப்பை இழுத்தது சரி தான்: மத்திய அமைச்சர்

பிஹார் CM நிதிஷ்குமார், பெண் டாக்டரின் <<18575369>>ஹிஜாப்பை<<>> பிடித்து இழுத்தது சரி தான் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். அரசு திட்டத்தில் சரியான நபர்தான் பயனடைகிறாரா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். விமான நிலையத்திற்கோ, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவோ சென்றால், முகத்தை மூடியா வைத்திருப்பீர்கள், இது என்ன இஸ்லாமிய நாடா, இது இந்தியா, சட்டத்தின் ஆட்சியே இங்கு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
கலை நாயகன் காலமானார்… PM மோடி உருக்கமாக இரங்கல்

உலகின் உயரமான சிலையை வடிவமைத்தவரும், பத்ம பூஷன் விருது வென்ற சிற்பியுமான <<18599857>>ராம் சுதரின்<<>> மறைவு கலைத் துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த PM மோடி, தனித்துவமான சிற்பங்களின் மூலம் இந்தியாவுக்கு பல மதிப்புமிக்க சின்னங்களை ராம் சுதர் வழங்கியுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார். அவரது படைப்புகள் கலைஞர்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.


