News February 11, 2025
வீட்டிற்கு ஒரு வாக்கை குறி வைக்கும் விஜய்
தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று மதியம் சுமார் 2.30 மணி நேரம் அவர்களது சந்திப்பு நடைபெற்ற நிலையில், இன்று ஒரு மணி நேரம் சந்திப்பு நடந்தது. இதில், தவெகவின் வாக்கு வங்கி குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், வீட்டிற்கு ஒரு வாக்கை உறுதி செய்ய பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 11, 2025
ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா நாளை விளையாடவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளை வென்றிருக்கும் இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கெனவே 4 டி20 போட்டிகளை வென்று இந்தியா மொத்த தொடரையும் கைப்பற்றியுள்ளது.
News February 11, 2025
7 வயது மகனை கொன்ற தந்தை
பிஹாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், தன் 7 வயது மகனை, தலையை துண்டித்து தந்தையே கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. 2-ம் வகுப்பு படிக்கும் மகன் ஸ்கூல் ஃபீஸ் கேட்டு தொல்லை செய்யவே, இப்படி செய்ததாகவும், இனி அவனுக்காக படிப்பு செலவு தேவையில்லை, வீடு வாங்க வேண்டியதில்லை, மொத்தத்தில் செலவில்லை என்று சொல்லி அந்த கொடூரன் வீடியோவும் வெளியிட்டுள்ளான். இதனால் விஷயம் வெளியே தெரிய, அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
News February 11, 2025
வார விடுமுறை: குவியும் சிறப்பு பஸ்கள்
வார விடுமுறை என்றாலே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு விடுகின்றனர். அந்த வகையில், வார விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக, வரும் 14, 15ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து பிற ஊர்களுக்கு 485 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 102 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.