News January 20, 2025
பரந்தூர் புறப்பட்ட விஜய்.. யார் யாருக்கு அனுமதி தெரியுமா?

விஜய், பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு எதிராக போராடும் மக்களை சந்திக்க நீலாங்கரையில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்டார். 12 மணி முதல் 1 மணிவரை வீனஸ் மஹாலில் போராட்ட குழுவினரை சந்திக்க இப்போதே புறப்பட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்டபத்தை சுற்றி 200 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News March 28, 2026
விஜய்யிடம் கூட்டணி பேசவில்லை: அமித்ஷா

NDA கூட்டணியில் இணைய வேண்டும் என விஜய்க்கு பாஜக அழுத்தம் கொடுத்ததாக பேசப்பட்டது. அதனை முற்றிலுமாக மறுத்துள்ள அமித்ஷா, விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்தை நடத்த முயற்சிக்க கூட இல்லை என கூறியுள்ளார். மேலும், NDA கூட்டணிக்கு தவெக வந்தால், தங்களது வாக்கு வங்கியிலேயே அது எதிர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என தனக்கு தோன்றியதாக அவர் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
4 லிட்டர் பெட்ரோலை பதுக்கியவருக்கு ஜெயில்

மேற்காசிய போர் நெருக்கடியால் இலங்கை கடுமையான எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு 4 லிட்டர் பெட்ரோலை பதுக்கி வைத்து, கள்ளச் சந்தையில் விற்க முயன்றவருக்கு ₹1,000 அபராதமும், 3 வார சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. <<19404464>>இலங்கையில் <<>>தற்போது, பெட்ரோல், டீசல் போன்றவை ரேஷன் முறையில் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
News March 28, 2026
உருமாறிய கொரோனா வகை.. வேகமாக பரவுகிறது

சிக்காடா என்ற BA.3.2 உருமாறிய கொரோனா வகை வைரஸை ‘கண்காணிக்கப்பட வேண்டிய வகை’ என 2025-ன் இறுதியிலேயே WHO கூறியிருந்தது. இந்நிலையில், USA, ஐரோப்பா, ஆஸி., ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இருப்பினும், இது COVID-19-ஐப் போன்று அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என டாக்டர்கள் கூறுகின்றனர். அதேநேரம், கொரோனா போன்றே காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய அறிகுறிகள் இருக்கும்.


