News October 4, 2025
விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை: துரைமுருகன்

விஜய்க்கு அரசியலில் போதுமான பக்குவம் இல்லை என்ற துரைமுருகன், அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார். விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் கூட திமுக அஞ்சியதில்லை, இனி அஞ்சப் போவதுமில்லை என்றார். எப்படிப்பட்ட சூழலிலும் மக்களுக்கான திமுகவின் சேவையை தொடர்ந்து கொண்டு இருப்போம் என்றும் கூறினார்.
Similar News
News October 4, 2025
2 நாளில் ₹100 கோடி தாண்டிய ‘காந்தாரா சாப்டர் 1’ வசூல்

தியேட்டர்களை அதிர வைத்துக்கொண்டிருக்கும் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’, 2 நாள்களில் ₹100 கோடி வசூலை தாண்டியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் முதல் நாளிலேயே ₹61.85 கோடி வசூல் செய்தது. இதனையடுத்து 2-ம் நாளில் ₹43.65 கோடியை வசூலிக்க, ஒட்டுமொத்தமாக ₹105.5 கோடியை படம் இதுவரை ஈட்டியுள்ளது. 2022-ல் வெளியான ‘காந்தாரா’ படம் ஒருவாரத்தில் ₹30.3 கோடியை வசூலித்திருந்தது.
News October 4, 2025
சற்றுமுன்: இதுமட்டும் நடந்தால் விஜய் கைது

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திருமா, வேல்முருகன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி இருந்தனர். இதே கருத்தையே நீதிமன்றமும் நேற்று கூறியுள்ளது. இந்நிலையில், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், விஜய் மீது தவறு உள்ளது, அவரை கைது செய்ய வேண்டும் என சொன்னால் காவல் துறை அந்த கடமையை செய்யும் என்று திமுகவின் T.K.S.இளங்கோவன் கூறியது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
News October 4, 2025
இவுங்கதான் இந்த சீசன் போட்டியாளர்களா?

என்டர்டெயின்மென்ட்டுக்கு குறைவில்லாத பிக் பாஸ் சீசன் 9 நாளை தொடங்கவுள்ளது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில், யார் யார் போட்டியாளர்களாக களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் இந்த சீசன் போட்டியாளர்கள் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. யார் யார் என பார்க்க, மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும்.