News December 6, 2024
புகைப்படத்தை பார்த்து இன்ப அதிர்ச்சியில் விஜய்

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய்க்கு, விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வழங்கிய புகைப்படம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அம்பேத்கர் கையை விஜய் பிடித்துள்ளதை போன்று தத்ரூபமாக படம் வரையப்பட்டிருந்தது. அதை சில வினாடிகள் ஆச்சரியம் விலகாமல் பார்த்த விஜய், சிரித்த முகத்துடன் அதனைப் பெற்றுக் கொண்டார்.
Similar News
News November 22, 2025
20 ஆண்டுகளுக்கு பின் முக்கிய பொறுப்பை இழந்த நிதிஷ்

10-வது முறையாக நிதிஷ் குமார் CM-ஆக பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதில் 20 ஆண்டுகளாக நிதிஷிடம் இருந்த உள்துறை DCM சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொரு DCM விஜய் குமாருக்கு வருவாய் மற்றும் நில சீர்த்திருத்த துறை வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், அமைச்சரவை செயலகம் உள்ளிட்ட துறைகளை CM தன்னிடம் வைத்துள்ளார்.
News November 22, 2025
விஜய்க்கு சொன்ன கதையில் ரஜினி நடிப்பாரா?

ரஜினியின் 173 படத்தின் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை என்றாலும், அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினிக்கு ஆர்.ஜே.பாலாஜி கதை ஒன்றை சொல்லியுள்ளாராம். இது விஜய்க்கு சொல்லப்பட்டு சில காரணங்களால் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் நின்ற கதையாம். ஆக்ஷன் சப்ஜக்ட்களில் இருந்து விலக நினைக்கும் ரஜினி, கலகலப்பான ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
News November 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
▶பொருள்: தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.


