News October 2, 2025
பாஜகவின் பிடியில் விஜய் இல்லை: நயினார் நாகேந்திரன்

தவெக நிர்வாகிகள் கேட்ட இடத்தில் மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதி வழங்கவில்லை என்பது உள்பட பல கேள்விகளை திமுக அரசை நோக்கி நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார். பாஜகவின் பிடியில் விஜய் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், பாஜகவை தன் கொள்கை எதிரி என விஜய் சொல்லும்போது, அவர் எப்படி தங்கள் பிடியில் இருப்பார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News October 2, 2025
அரசு வேலைக்காக குழந்தையை புதைத்த கொடூர பெற்றோர்

ம.பி.,யில் உள்ள காட்டில் சமீபத்தில், பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், தனது அரசு வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் கணவனும், மனைவியும் தங்களது 4-வது குழந்தையை உயிருடன் புதைத்தது தெரியவந்துள்ளது. ம.பி.,யில் அரசு பணியாளர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதால், 3-வது குழந்தையையும் அத்தம்பதி அரசு ஆவணங்களில் இருந்து மறைத்துள்ளனர்.
News October 2, 2025
எந்த நேரத்தில் டீ குடிப்பது நல்லது?

நம்மில் பலருக்கும் அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருந்தாலும் அது தவறு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அல்சர், தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரமான 10.30 – 11 மணி மற்றும் மாலை 3 மணி அளவில் டீ குடிப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே டீ குடியுங்கள். SHARE IT..
News October 2, 2025
ரகுராம் ராஜன் தந்தை மறைவு: CM ஸ்டாலின் இரங்கல்

RBI முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் தந்தை <<17887963>>ராகவாச்சாரி கோவிந்தராஜன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு வேதனை அளிப்பதாகவும், ரகுராம் ராஜனை தொடர்பு கொண்டு அவருக்கு இரங்கலை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், RAW அமைப்பில் அவரது பணி நன்றியுடன் நினைவுகூரப்படும் என ஸ்டாலின் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.