News September 9, 2025

மனைவி சங்கீதாவுடன் களமிறங்குகிறார் விஜய்..!

image

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, லண்டனில் இருந்து நீண்ட காலத்திற்கு பின், தமிழகம் திரும்பியுள்ளார். அவரது வருகையின் பின்னணியில், விஜய்யின் அரசியல் பயணம் இருக்கிறதாம். குறிப்பாக. செப்.13-ம் தேதி விஜய் முதலாவதாக தொடங்கும் தேர்தல் பரப்புரையில் சங்கீதா கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் விஜய்க்கு அவர் உறுதுணையாக இருப்பார் என கூறப்படுகிறது.

Similar News

News September 10, 2025

பஞ்சாப்பிற்கு ₹1,600 நிதியுதவி : PM மோடி

image

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப்பிற்கு ₹1,600 கோடி நிதியுதவி வழங்கப்படும் என PM மோடி அறிவித்துள்ளார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட PM, பிறகு குருதாஸ்பூரில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ₹60,000 கோடி நிவாரணம் கேட்ட நிலையில் மிகக் குறைவான தொகை வழங்கப்படுவதாக பஞ்சாப் வருவாய் துறை அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக PM ஹிமாச்சலுக்கு ₹1,500 கோடி நிதியுதவி அறிவித்திருந்தார்.

News September 10, 2025

அன்னை தெரசா பொன்மொழிகள்

image

*தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மிகவும் மோசமான வறுமையாகும். *ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை. *சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் அதில்தான் உங்களது வலிமை உள்ளது. *உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள். *மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.

News September 10, 2025

நேபாளில் ராணுவ ஆட்சி

image

நேபாள் நாட்டில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை கண்டித்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேபாள் ஜனாதிபதி, PM ராஜினாமா செய்தனர். நாடாளுமன்றம், அமைச்சர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நேபாள் ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது.

error: Content is protected !!