News October 1, 2025
‘கரூர் செல்கிறார் விஜய்’

கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது வேதனை அளிப்பதாக நடிகரும் தவெக நிர்வாகியுமான தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க, விஜய் விரைவில் கரூர் செல்ல இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவெகவின் 2-ம் கட்ட தலைவர்கள் அஜாக்கிரதையாக இருந்ததாக குற்றஞ்சாட்டிய தாடி பாலாஜி, அவர்களது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News October 1, 2025
தங்கம் விலை உயர்விற்கு பாஜக காரணம்: அகிலேஷ் யாதவ்

தங்கம் விலை உயர்விற்கு பாஜக அரசு காரணம் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பாஜகவினர் தங்களது கருப்பு பணத்தை தங்கமாக மாற்றும் தங்கமயமாக்கல் முறையினால் தான், விலை உயர்வதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தையால் விலை தீர்மானிக்கப்படுகிறது என்றால், எந்த பொருளாதார விதி மற்றும் கொள்கையின் கீழ், ஆடம்பர உலோகங்களின் விலைகள் உயர்கின்றன என்பதை அரசாங்கம் வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார்.
News October 1, 2025
ஆளே மாறிய நடிகர் அஜித் PHOTOS

கார் பந்தயத்தில் தீவிரமாக களமாடி வரும் நடிகர் அஜித் குமார், புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளார். வழக்கமாக வெள்ளை நிற சீருடையில் வலம்வரும் அஜித் குமார் ரேஸிங் அணி, Asian Le Mans Series போட்டியில் சிவப்பு நிற சீருடையில் களமிறங்க உள்ளது. புதிய சீருடையில் அணியினருடன் அஜித் இருக்கும் போட்டோஸ் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ‘தல ஆளே மாறிட்டார்’ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News October 1, 2025
மெஹந்தியை தலைக்கு இப்படி யூஸ் பண்ணுங்க..!

➤நரை முடியை மறைக்க, மெஹந்தியை கிரீன் டீயில் ஊற வைத்து, தயிர், முட்டை சேர்த்து முடியில் தடவவும். 2-3 மணி நேரம் கழித்து கழுவவும் ➤மெஹந்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும். இதனால், மெஹந்தி, வெந்தய தூள், பிராமி பவுடரை சேர்த்து முடியில் தடவி, 1 மணி நேரம் கழித்து குளிக்கவும் ➤மெஹந்தியுடன் தயிர், தேன் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் போட்டு கழுவினால், இயற்கை கண்டிஷனர் போல செயல்படும். SHARE.