News October 28, 2025

பாஜகவால் தப்பிக்கிறார் விஜய்: சீமான் குற்றச்சாட்டு

image

கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்தான் முதன்மை காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். விஜய் மீது சிபிஐ FIR பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், பாஜக கூட்டணிக்கு விஜய் செல்லவில்லை எனில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என்றார். மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமின் மனுவை ஆனந்த் திரும்ப பெறுகிறார் என்றால் சிபிஐ அவரை காப்பாற்றுகிறது என்றே அர்த்தம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

Similar News

News October 28, 2025

தமிழ்நாட்டை தொடர்ந்து கேரளாவிலும் எதிர்ப்பு

image

2-ம் கட்டமாக SIR நடத்த போவதாக ECI நேற்று அறிவித்தது. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி சவால் என கேரள CM பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேட்டை(NRC) மறைமுகமாக திணிக்கும் முயற்சி எனவும், மத்தியில் ஆளும் கட்சியின் கைப்பாவையாக ECI செயல்பட கூடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, ECI-ன் அறிவிப்பை திமுக கூட்டணி கட்சிகளும் சாடியிருந்தது.

News October 28, 2025

வழுக்கை தலையில் 20 நாளில் முடி வளரும்.. வந்தாச்சு மருந்து!

image

காதலி இல்லாத வலியை விட, முடி கொட்டும் வலிதான் இளைஞர்களை வாட்டி வதைக்கிறது. ஆனால், இப்பிரச்னைக்கு தைவான் ஆய்வாளர்கள் தீர்வு கண்டறிந்துள்ளனர். National Taiwan University-யை சேர்ந்த ஆய்வாளர்கள், 20 நாள்களில் வழுக்கை தலையில் முடி வளர்க்கும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் மீது இன்னும் சோதிக்கப்படவில்லை என்றாலும், ‘பண்டிகைய கொண்டாடுங்கலே’ என்ற மோடில் நெட்டிசன்கள் ஆனந்தத்தில் திளைத்துள்ளனர்.

News October 28, 2025

8-வது ஊதியக்குழுவுக்கு மத்திய அரசு ஒப்புதல்

image

8-வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குழு தலைவராக ரஞ்சனா பிரகாஷ் தேசாய், உறுப்பினர் செயலாளராக பங்கஜ் ஜெயின், பகுதி நேர உறுப்பினராக புலக் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் பரிந்துரைப்படி 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடையவுள்ளனர். 2026-ம் ஆண்டு ஜன.1 முதல் இக்குழுவின் பரிந்துரைகள் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும்.

error: Content is protected !!