News August 20, 2024
நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

தவெக கொடியை எங்கெல்லாம் ஏற்றுவது என கட்சியினருக்கு, விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்கட்டமாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் சொந்த இடங்களில் கல்வெட்டு அமைத்து கொடியை ஏற்ற அறிவுறுத்தியுள்ளார். அனுமதி பெறவில்லை என கூறி, எந்த ஒரு கொடிக்கம்பமும் அரசு நிர்வாகத்தால் அகற்றப்பட்டு விடக்கூடாது என்பதில், அவர் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 22, 2026
நிலக்கரி உற்பத்தியில் இந்தியா சாதனை

இந்தியா தொடர்ந்து 2-வது ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தியை எட்டி சாதனை படைத்துள்ளது. எரிசக்தி துறையில் நாடு சுயசார்பு அடைந்து வருவதற்கு இது முக்கிய சான்றாக அமைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு போதுமான அளவு பராமரிக்கப்படுவதால், அதிகரித்து வரும் நாட்டின் மின் தேவையை திறம்பட எதிர்கொள்ள முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
News March 22, 2026
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் பொன்மொழிகள்

*வரவு அறிந்து செலவு செய்வது சிக்கனம். செலவு அறிந்து வரவு சேர்ப்பது நற்குணம். *லட்சங்களை சம்பாதிப்பது என் லட்சியம் அல்ல; லட்சியவாதிகளை உருவாக்குவதே என் லட்சியம். *அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டாம்; ஒழுக்கத்தை நம்பியிருங்கள். *கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம். *நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல, நாமே ஏற்படுத்திக் கொள்வது.
News March 22, 2026
தேர்தலுக்கு பின் விலை உயரும்: ராகுல் காந்தி

5 மாநில தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு உயர்த்தக்கூடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தொழில்துறை எரிபொருள் விலை உயர்வால் உற்பத்தி & போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, சாமானிய மக்களின் உணவுத் தட்டில் உள்ள பொருட்களின் விலையும் உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 100-ஐ நோக்கிச் சரிவது கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.


