News September 20, 2025

TRB ராஜாவை மறைமுகமாக சாடிய விஜய்

image

திருவாரூர் பரப்புரையில் அமைச்சர் TRB ராஜாவை விஜய் மறைமுகமாக சாடினார். இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவரோட வேலை என்ன தெரியுமா? CM குடும்பத்திற்கு சேவை செய்யுறது மட்டும் தான் அவருடைய வேலை. அந்த அமைச்சருக்கு மக்கள் தான் முக்கியம்னு புரிய வைக்க வேண்டும் என விஜய் கூறினார். மேலும், திருவாரூரில் பஸ் ஸ்டாண்டை NH உடன் இணைக்க சரியான ரோடு வசதி கிடையாது என்று குற்றஞ்சாட்டினார்.

Similar News

News September 21, 2025

நயன்தாராவுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வருது? சீமான்

image

விஜய்யை பார்க்க ஆட்கள் கூடுவார்கள், ஆனால் அவர் பேசுவதை கேட்க கூடமாட்டார்கள் என சீமான் தெரிவித்துள்ளார். 60 ஆண்டுகளாக கோட்பாடு கொண்ட ஒரு கட்சியை சினிமா கவர்ச்சியால் தகர்க்க முடியாது என்றும் வலுவான கொள்கை கோட்பாடு கொண்ட தமிழ் தேசியத்தால் மட்டுமே திராவிடத்தை வெல்ல முடியும் எனவும் அவர் கூறினார். மேலும், நயன்தாரா, வடிவேலு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடுகிறது என்றும் சீமான் கேள்வியெழுப்பினார்.

News September 20, 2025

ராசி பலன்கள் (21.09.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News September 20, 2025

விவசாயிகள் வயிற்றில் அடித்து ₹40 கமிஷன்: விஜய்

image

நெல் கொள்முதலில் திமுக அரசு கோடிக்கணக்கில் கமிஷன் அடிப்பதாக விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் பேசிய அவர், ஒரு நெல் மூட்டைக்கு ₹40 கமிஷன் அடித்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துள்ளதாக விமர்சித்துள்ளார். 40-40 தொகுதி வெற்றி என கணக்கு போட்ட திமுக, தற்போது விவசாயிகளின் வயிற்றில் அடித்து ₹40 கமிஷன் பெறுவதாகவும் ஆவேசமாக பேசினார்.

error: Content is protected !!