News October 13, 2025
கண்ணீரில் விஜய்.. உருக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி இன்றோடு 16 நாள்களாகிறது. துக்கம் அனுசரிக்கும் விதமாக, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், பலியானவர்களின் போட்டோக்களுடன் கண்ணீருடன் விஜய் இருக்கும் போட்டோவும் இடம்பெற்றுள்ளது. மேலும், ‘உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்கள் எண்ணங்கள் ஈடேற சபதம் ஏற்போம்’ என போஸ்டரில் உருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
டேட்டிங் போறீங்களா? இதை கவனிக்க மறக்காதீங்க

முதல்முறை டேட்டிங் அல்லது வீட்டில் உங்களுக்காக பார்த்த நபரை சந்திக்கப் போகிறீர்கள் என்றால் இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம். அவர்கள் நடந்து கொள்ளும் முறை, அவர்களை பற்றி மட்டும் பெருமையாக பேசுவது, எல்லை மீறி உங்களை கேலி செய்வது, பொய் பேசுவது, உங்கள் கடந்த காலத்தை விமர்சித்து பேசுவது உள்ளிட்ட குணம் இருந்தால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்க நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
News October 13, 2025
SP வேலுமணி வழக்கு: DVACக்கு கோர்ட் கண்டனம்

கோர்ட் உத்தரவின்படி முன்னாள் அமைச்சர் SP வேலுமணி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை HC, Ex அமைச்சர், IAS அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்காததற்கு DVAC மீது அதிருப்தி தெரிவித்தது. அமைச்சர்கள், MP-க்கள், MLA-க்கள் மீதான வழக்குகள் எதுவுமே நகர்வதில்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
News October 13, 2025
PF பணத்தை இனி முழுவதுமாக எடுக்கலாம்..!

தீபாவளி பரிசாக PF பணத்தை முழுமையாக எடுக்கும் வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, பணியாளர், நிறுவனம் என இரண்டு கணக்கிலிருந்தும் 100% வரை பணம் எடுக்கலாம். கிளெய்ம் பிரிவுகளும் 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், திருமணம், கல்விக்காக வித்டிராயல் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வட்டி பலன்களை பெறும் வகையில் குறைந்தபட்ச இருப்புத்தொகை 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SHARE IT.