News April 19, 2024
தொண்டர்களுக்கு வழிவிட்ட விஜய்

2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது கருப்பு, சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அவர் எப்படி வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இந்தத் தேர்தலில் விருப்பப்படி வாக்களியுங்கள் என கூறியிருந்த விஜய், அதை உறுதி செய்யும் விதமாக எவ்வித குறியீடும் இல்லாமல் வந்து வாக்களித்துச் சென்றார்.
Similar News
News January 24, 2026
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத்தொகை ₹1000 பெறும் பெண்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலைவாய்ப்பற்றோருக்கான மாத உதவித்தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள பெண்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை, எளிய குடும்ப பெண்கள், இதில் ஒன்றை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
News January 24, 2026
அதிமுகவாக மாறிவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனா

OPS தரப்பினர் திமுகவில் இணைந்து வரும் நிலையில், ‘திமுக உண்மையான அதிமுகவாக மாறிவிட்டது’ என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். எந்த கட்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கும் கோழி பிடிக்கும் கட்சியாக திமுக மாறிவிட்டதாக சாடிய அவர், 2026 தேர்தலுக்காக எத்தனை கூட்டணிகள் உருவானாலும், விஜய் இல்லாத ஒரு கூட்டணியை மக்கள் ஒருபோதும் தேர்வு செய்யமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
அரசியலுடன் மதத்தை இணைப்பது ஆபத்து: மாயாவதி

குறுகிய நலனுக்காக சிலர் அரசியலையும், மதத்தையும் இணைப்பதாக Ex CM மாயாவதி வேதனை தெரிவித்துள்ளார். அண்மை காலமாக அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்த மாயாவதி உத்தரபிரதேச தினத்தையொட்டி தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், UP-ல் நடக்கும், மத விழாக்கள், புனித நீராடல்களில் அண்மை காலமாக அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதாக ஆளும் பாஜக அரசை சாடியுள்ளார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


