News October 2, 2025
சுயமாக சிந்தித்தால் மட்டுமே விஜய்க்கு எதிர்காலம்: திருமா

கரூர் துயருக்கு திமுக மீது பழி சுமத்துவது என்பது ஆபத்தான அரசியல் என திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் எப்போது சுயமாக சிந்தித்து செயல்திட்டங்களை வரையறுக்கிறாரோ, அப்போது தான் அவருக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உருவாகும் என்றும் விமர்சித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அரசு மீதே தவறு உள்ளதாக அண்ணாமலை உடனடியாக கூறியது, அவர்களுக்கே எதிராகவே முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.
Similar News
News October 2, 2025
Cinema Roundup: SK ஜோடியாக நடிக்கும் ரஷ்மிகா மந்தனா

*’மூக்குத்தி அம்மன் 2′ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10.05 மணிக்கு வெளியாகிறது. *சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஹீரோயினாக ரஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். *விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. *ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா 2’ படத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
News October 2, 2025
இந்திய அணியின் பிளேயிங் 11

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா 3 ஸ்பின்னர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட நிதிஷ் ரெட்டி அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியா பிளேயிங் 11 : கில், ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.
News October 2, 2025
BREAKING: தங்கம் விலை சரசரவென குறைந்தது

வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹70 குறைந்து ₹10,880-க்கும், சவரனுக்கு ₹560 குறைந்து ₹87,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 10 நாள்களுக்கு பிறகு தங்கம் விலை குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.