News April 4, 2025
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு… இன்று முதல் அமலுக்கு வந்தது

தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு Y, Z என பல பிரிவுகளில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அந்த வரிசையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் விஜய்க்கு 8 – 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள்.
Similar News
News April 11, 2025
இனி தியேட்டரிலும் மது விற்பனை.. வரும் புது திட்டம்!

குடும்பமாக அமர்ந்து, ஒன்றாக சிரித்து மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வரும் இடமே தியேட்டர். அம்மாதிரியான பொது இடத்தில், மது விற்பனை செய்ய PVR – INOX உரிமம் கேட்டுள்ளதாம். இது பெரிய மெட்ரோ நகரங்களில் ரசிகர்களை ஈர்க்க செய்யப்போகும் ஸ்டேட்டர்ஜி என விளக்கமளிக்கின்றனர். ஆனால், வெளியில் இருந்து வாங்கிட்டு வரக்கூடாது. அவர்களே தியேட்டரில் விற்பனை செய்வார்களாம். இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?
News April 11, 2025
Instaவில் வரும் புது அப்டேட்.. இனி ரீல்ஸ் பாக்குறது கஷ்டம்!

இன்ஸ்டாகிராம் தனது யூசர்களுக்கு புதிய அம்சத்தைக் கொண்டுவர இருக்கிறது. ரீல்ஸ்களைப் பாஸ்வோர்ட் போட்டு லாக் செய்து கொள்ளலாம். இந்த அம்சம், பிரத்தியேக(Exclusive) Contentஐ பகிர்ந்து Creatorகள், தங்களது ஃபாலோயர்ஸை அதிகரித்து கொள்ள உதவும் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த தகவல் வெளிவர, சில யூசர்கள், இந்த அம்சம் Scrolling போது, தொந்தரவு செய்யும் என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News April 11, 2025
பங்குனி உத்திரத்தில் யோகி பாபு பக்தி பரவசம்!

பங்குனி உத்திர நாளை முன்னிட்டு நடிகர் யோகிபாபு தனது X பக்கத்தில் முருகன் படத்தை பதிவிட்டுள்ளார். திரைப்படங்களில் காமெடி நடிகராக கலக்கி வரும் யோகி பாபு, நிஜ வாழ்க்கையில் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி முருகன் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இன்று பங்குனி உத்திரம் என்பதால், ஓம் சரவணபவ என முருகன் படத்துடன் தனது X பக்கத்தில் பக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.