News September 21, 2025

பரப்புரையில் தவறான தகவலை சொன்ன விஜய்

image

அலையாத்தி காடுகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நாகையில் கடல்சார் கல்லூரி எதுவும் இல்லை என்றும் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டினார். இதனை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. 2021-ல் 45 சதுர கி.மீ பரப்பளவாக இருந்த அலையாத்தி காடுகள் தற்போது 90 சதுர கி.மீ. என பெருகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், நாகையில் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Similar News

News September 21, 2025

வரலாற்று சாதனை படைத்த ‘லோகா’!

image

மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ உருவெடுத்துள்ளது. இப்படம் வெளியாகி 23 நாள்களில் உலகம் முழுவதும் ₹267 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, மோகன்லால் நடித்த ‘L2 : எம்புரான்’ ₹265 கோடி வசூலித்ததே சாதனையாக கருதப்பட்டது. மோகன்லால், மம்முட்டி என பெரிய ஸ்டார்கள் இருக்க, ஒரு ஹீரோயின் முதன்மை கேரக்டரில் நடித்த படம், இவ்வளவு பெரிய வசூலை குவித்துள்ளது.

News September 21, 2025

ராகுலின் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு குழு

image

ராகுல் காந்தியின் வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஆலந்தா தொகுதியில் 5,994 பேரின் பெயர்களை தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக நீக்கியதாகவும், இதுதொடர்பான ஆவணங்களையும் வழங்க மறுப்பதாகவும் ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், அனைத்து ஆவணங்களையும் வழங்கியதாக தேர்தல் ஆணையம் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்தது.

News September 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 465 ▶குறள்: வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. ▶பொருள்: முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

error: Content is protected !!