News August 16, 2024
விஜய்யின் தவெகவில் வாகை மலர்?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியில், வாகை மலர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகை என்றால் வெற்றி என்ற அடிப்படையில் கட்சிக்கொடியில் இந்த மலர் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெறுகிறதாம். இது தொடர்பான தகவல் வெளியாகி, தொண்டர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. TVK அரசியல் நகர்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?
Similar News
News December 31, 2025
புடின் வீடு மீதான தாக்குதல் முயற்சி கவலையளிக்கிறது: PM

<<18708032>>புடினின்<<>> இல்லம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக செய்தி வெளியானது. இதுகுறித்து பதிவிட்டுள்ள PM மோடி, அதிபரின் இல்லமே குறிவைக்கப்பட்டதாக வெளிவரும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிப்பதாக கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர, தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தைகளே மிகச்சிறந்த வழி என தெரிவித்த அவர், அமைதி முயற்சிகளை சீர்குலைக்கும் எந்த செயலிலும் இருநாடுகளும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
News December 31, 2025
சுவையான பழங்களை தரும் பாலைவனம்

பாலைவனங்கள் பெரும்பாலும் கடுமையான வறண்ட நிலப்பரப்புகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அங்கு உயிர்வாழும் தாவரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள் மிகவும் சுவையானதாக இருக்கும். சுவையான பாலைவன பழங்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 30, 2025
வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு இந்து நபர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடை தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்த பஜேந்திர பிஸ்வாஸை (42), சக காவலாளி நோமன் மியா (29) சுட்டுக் கொன்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, கவனக்குறைவால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில் நடந்த 3-வது கொலை இதுவாகும்.


