News October 12, 2025
விஜய்க்கு சினிமாவிலேயே முழு அறிவு கிடையாது: சீமான்

ஒரு சிறந்த விலைமதிப்புமிக்க செய்தி வாசிப்பாளர் போல் விஜய் பிரசாரத்தில் ஈடுபடுவதாக சீமான் விமர்சித்துள்ளார். விஜய்க்கு, அவர் சார்ந்த சினிமா துறையிலேயே முழு அறிவு கிடையாது என்று கடுமையாக சாடிய அவர், அத்துறையில் எழும் பிரச்னைகளுக்கே விஜய்யால் தீர்வு காண முடியாது எனவும் குறிப்பிட்டார். மேலும், விஜய்க்கு முன்னால் செல்லும் நண்பா, நண்பிகள், தனது தம்பி, தங்கைகள் எனவும் சீமான் தெரிவித்தார்.
Similar News
News March 10, 2026
BREAKING: இந்திய அணிக்கு ₹131 கோடி பரிசு

T20 WC கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ₹131 கோடி பரிசு அறிவித்துள்ளது. இந்த பரிசுத் தொகை அணியின் 15 வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் மற்றும் பிற துணை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். வெகுமதித் தொகையில் பெரும்பகுதி வீரர்களுக்கும், துணை ஊழியர்களின் தொகை அவர்களது படிநிலைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.
News March 10, 2026
ஒரு லிட்டர் ஆயில் கூட வெளியே வராது: ஈரான்

<<19342545>>எண்ணெய் கப்பல்களை தடுத்தால்<<>> கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்ந்தால் எதிரி நாடுகளின் கச்சா எண்ணெயை ஒரு லிட்டர் கூட வெளியே விடமாட்டோம் என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே எண்ணெய் விலைகள் உயரும் என்று கவலையில் உள்ள நாடுகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
News March 10, 2026
BREAKING: கேஸ் சிலிண்டர்.. அரசு அவசர அறிவிப்பு

சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955-ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிலிண்டர்களை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


