News October 5, 2025

‘விஜய் செய்தது தவறு’

image

கரூர் துயர சம்பவத்தின்போது விஜய் செய்தது தவறு என பிரேமலதா சாடியுள்ளார். கரூருக்கு குறித்த நேரத்திற்கு விஜய் செல்லவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், மக்கள் காத்து கிடக்கிறார்கள் என்ற பொறுப்பு இல்லாமல் கடமை உணர்வை தவறவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். விஜயகாந்தை அண்ணன் எனக் கூறும் விஜய், அவர் என்ன செய்தார் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என பிரேமலதா காட்டமாக தெரிவித்துள்ளார்.

Similar News

News October 6, 2025

13-0! பாகிஸ்தானை பந்தாடும் இந்தியா

image

கொழும்புவில் நடந்த மகளிர் உலக கோப்பை போட்டியில், இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம், ODI உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 13 போட்டிகளிலும் வெற்றி கண்டு இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் ஆதிக்கம் 100% தொடர்கிறது. இப்போட்டியில் 247 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியா, மகளிர் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

News October 6, 2025

இந்தியாவை புதைப்போம்: பாக். அமைச்சர்

image

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய போர் விமானங்களை புதைத்ததை போல், இந்தியாவையும் புதைப்போம் என பாக்., அமைச்சர் கவாஜா எச்சரித்துள்ளார். போரில் தோற்ற பதற்றம் PM மோடி, அவரது சகாக்களிடம் தெரிவதாகவும், மீண்டும் அதுபோன்று முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக, எல்லையில் அத்துமீறினால், உலக வரைபடத்தில் இருந்து பாக்., அகற்றப்படும் என இந்திய தலைமை தளபதி திவேதி எச்சரித்து இருந்தார்.

News October 6, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!