News August 6, 2025

விஜய் தேவரகொண்டாவிடம் ED அதிகாரிகள் விசாரணை

image

ஐதராபாத்தில் உள்ள ED அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா இன்று ஆஜரானார். ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக பதியப்பட்ட பணமோசடி வழக்கில் விஜய் தேவரகொண்டாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முன்னதாக இதே வழக்கில் கடந்த 30-ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜிடம் ED விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 11, 2026

கள்ளக்குறிச்சி: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

BREAKING: சிலிண்டர் விலை ₹4,000? அதிர்ச்சி

image

தமிழகத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சிலர், சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வணிக சிலிண்டர் ₹4,000-க்கும், தருமபுரியில் ₹3,000-க்கும் விற்கப்படுவதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

News March 11, 2026

ஒரே இடம்.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் மோடி!

image

நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில், <<19339925>>பாஜகவை CM ஸ்டாலின் கடுமையாக விமர்சனம்<<>> செய்திருந்தார். அதற்கு அதே திருச்சியில் இன்று மாலை PM மோடி பதிலடி கொடுக்க உள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். பஞ்சப்பூரில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டத்தில் சுமார் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும் பாஜக தரப்பு தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் மேடை ஏற உள்ளனர்.

error: Content is protected !!