News March 31, 2024
விஜய் தேவரகொண்டாவுக்கு விரைவில் திருமணம்

திருமணம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா ஓப்பனாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எனக்கு விரைவில் திருமணம் நடக்கும். அது நிச்சயம் காதல் திருமணம் தான். அதுவும், எனது பெற்றோர் சம்மதத்துடன் தான் நடக்கும்” எனக் கூறியுள்ளார். நடிகை ராஷ்மிகாவுடன் அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கும் அவர், விரைவில் தங்கள் காதலை ரசிகர்களுக்கு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 13, 2025
SPORTS ROUNDUP: மகளிர் ODI WC.. பெங்களூருவில் இருந்து மாற்றம்

◆சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அனிசிமோவா(USA) & ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிட்சிபாஸ்(கிரீஸ்) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி.
◆2-வது T20: 53 ரன்கள் வித்தியாசத்தில் SA வெற்றி. முதலில் ஆடிய SA 20 ஓவர்களில் 218/7, AUS 17.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்.
◆மகளிர் ODI WC: பெங்களுரூவில் நடக்கவிருந்த அனைத்து போட்டிகளும் வேறு மைதானத்திற்கு மாற்றப்படுவதாக தகவல்.
News August 13, 2025
CM தலைமையில் இன்று கூடும் அமைச்சரவை

CM ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இம்மாத இறுதியில் CM, தொழில் முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல உள்ளதால், அதுபற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
News August 13, 2025
சிம்ம முகத்துடன் காட்சி தரும் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி!

கும்பகோணம் அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி சிம்ம முகம், 18 கரத்துடன் காணப்படுகிறாள். கவுரவர்களிடம் தோற்று காட்டுக்கு சென்ற பஞ்ச பாண்டவர்கள் நாட்டை மீட்க, இங்கு வந்து யாகம் வளர்த்து பிரத்யங்கிரா தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் இன்றளவும் அமாவாசை தோறும் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொண்டால் மன தைரியம் கிடைக்கும். SHARE IT.