News April 8, 2024
சீரடி கோயிலில் விஜய் தரிசனம்

சீரடி சாய் பாபா கோயிலில், நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘GOAT’ படத்திற்கான படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய் பாபா கோயிலுக்குச் சென்ற அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டது.
Similar News
News March 23, 2026
மகளிர் உரிமைத்தொகை.. பணம் கிடைக்க இது கட்டாயம்

திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மகளிர் உரிமைத்தொகை உயரப்போகிறது. ஆனால், மகளிர் உரிமைத்தொகை பெற்று வந்த சிலரின் வங்கிக் கணக்கில் திடீரென பணம் வராமல் போனது. அதற்கு அவர்களது ரேஷன் கார்டு தொடர்ந்து 3 மாதங்கள் ஆக்டிவ் நிலையில் இல்லாததே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த சிரமத்தைப் போக்க மாதந்தோறும் ரேஷன் கடைகளில் உங்களுக்கான பொருள்களை வாங்கி ரேஷன் கார்டை ஆக்டிவாக வைத்திருங்கள்.
News March 23, 2026
மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மருதாணி இலையை அரைத்து பசையாக வைத்தால், கால் எரிச்சல் அடங்கும் ➤மருதாணியுடன் வசம்பு, மஞ்சள், கற்பூரத்தை அரைத்து, உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் தடவினால் குணமாகும் ➤கிருமி நாசினி என்பதால், மருதாணி இட்டுக் கொள்வதால் நகச்சுத்தி வராது ➤மருதாணியை அரைத்து நீரில் கரைத்து, வடிகட்டி அந்த நீரில் வாய்க் கொப்பளித்தால், வாய்ப்புண் தொல்லை நீங்கும். SHARE IT.
News March 23, 2026
FLASH: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சசிகலா!

புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நெட்டப்பாக்கம்(தனி) – சிலம்பரசன், வில்லியனூர் – நந்தகோபால், உழவர்கரை – லாவண்யா, இந்திரா நகர் – ஜெயபால் (எ) செங்கேணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் ராமதாஸ் தரப்பு 10 தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


