News October 1, 2025

3-வது நாளாக விஜய் ஆலோசனை

image

தவெக தேர்தல் பரப்புரையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள விஜய், நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சென்று 3-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பட்டினப்பாக்கம் இல்லத்தில் 2 நாள்களாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நேற்று இச்சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்றைய ஆலோசனைக்கு பின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 10, 2026

கணவன் வெறிச்செயல்… டீச்சருக்கு கொடுமை

image

உ.பி.,யின் ராம்பூரில், தாம்பத்தியத்தின்போது ஏற்பட்ட சண்டையில் டீச்சரான மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சண்டை ஏற்படும் நிலையில், சம்பவத்தன்றும் பிரச்னை வெடித்துள்ளது. கொலை செய்த கணவர், மகனை தனது தம்பி வீட்டில் ஒப்படைத்துவிட்டு போதை மறுவாழ்வு மையத்தில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

News April 10, 2026

‘ஜன நாயகன்’ முழு படமும் வெளியானது

image

ஜன நாயகன் படம் முழுமையாக இணையத்தில் HD தரத்துடன் சட்டவிரோதமாக வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சார் பிரச்னை, தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் படமே இன்னும் ரிலீஸாகாத நிலையில், முழு படமும் பைரசி இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இது எப்படி வெளியானது என்பது பற்றி படக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனராம்.

News April 10, 2026

போர்.. உலக நாடுகளை நடுங்க வைத்த ஈரான் அறிவிப்பு

image

அமெரிக்கா, இஸ்ரேலுடன் போர் இழப்பீடுகாக ‘இரத்த பணம்’ கேட்கப்படும் என முஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். போரில் மரணித்த, காயமடைந்தவர்களுக்கு அமெரிக்கா நஷ்டஈடு வழங்க வேண்டும்; இல்லையென்றால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால், ஹார்முஸை ஈரான் மீண்டும் மூடுமோ என உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

error: Content is protected !!