News April 9, 2025
குமரி அனந்தன் மறைவிற்கு விஜய் இரங்கல்

எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா குமரி அனந்தன் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் என்று தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். நம் கொள்கைத் தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்; மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Similar News
News December 3, 2025
ஒரே நாடு, ஒரே தேர்தல்: தேர்தல் கமிஷனரிடம் ஆலோசிக்க முடிவு

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா பற்றி ஆலோசிக்க ஞானேஷ் குமாருக்கு பார்லி., கூட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் EC-க்கு வழங்க வேண்டிய அதிகாரத்தின் அளவு விவாதத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளதால் ஞானேஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 3, 2025
கூட்டணிக்கு Plan B-ஐ கையில் வைத்திருக்கிறதா காங்கிரஸ்?

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது காங்கிரஸ். இதனால் ஆளும் தரப்பும் ஆசுவாசமானது. ஆனால், திமுகவுக்கு தெரியாமல் தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சீக்ரெட்டாக காங்., ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக அறிவிக்கப்படாத அணி ஒன்று தீவிரமாக இயங்கி வருகிறதாம். கேட்கும் சீட்டை கொடுக்கவில்லை எனில் மீண்டும் கூட்டணியில் குழப்பம் வெடிக்கலாம் என பேசப்படுகிறது.