News September 7, 2025
விஜய்யால் தாக்கம் ஏற்படுத்த முடியாது: ராஜகண்ணப்பன்

தனியாக நிற்கும் விஜய்யால் அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம். ஆனால், அதில் பங்கேற்கும் சிறுவர்களால் ஓட்டு போட முடியாது என அவர் விமர்சித்துள்ளார். மேலும், திடீரென வந்து அரசியல் செய்வது சாதாரணமல்ல என்றும் கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்குறீங்க?
Similar News
News September 7, 2025
பிரமாண்ட மாநாடுகளுக்கு ஸ்கெட்ச் போட்ட பாஜக

2026 தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 பிரமாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னை, மதுரை, கோவை, தஞ்சை ஆகிய 4 இடங்களில் பாஜக மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்துவருவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த மாநாடுகளில் PM மோடி பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பாஜக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News September 7, 2025
டூத்பேஸ்ட் வாங்கும் போது இந்த தவறை பண்ணாதீங்க!

பல் மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*Fluoride குறைந்த டூத்பேஸ்ட்டை தேர்வு செய்வது நல்லது.
*ஜெல் பேஸ்ட்டுகளை விட, கிரீம் பேஸ்ட்டுகளே சிறந்தவை.
*Abrasives அதிகமான பேஸ்ட்டுகளால் பல் சொத்தை ஏற்படலாம்.
*Sodium Lauryl Sulfate- SLS, Sodium Laureth Sulfate- SLES ஆகியவை அடங்கிய பேஸ்ட்டுகள் தவிர்க்கலாம்.
அடுத்த முறை டூத்பேஸ்ட் வாங்கும் போது, இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். SHARE IT.
News September 7, 2025
TN-ல் பல ஆயிரக்கணக்கானோர் ஆதரவு: செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் குறிப்பாக ஈரோட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான MGR, ஜெயலலிதாவின் தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைவருக்கும் நன்றி என்றார். கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு, அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.