News August 22, 2024

1111 எண் காரில் கட்சி அலுவலகம் வந்த விஜய்

image

விஜய் இன்று தனது தவெக கட்சிக் கொடியை ஏற்றுவதற்காக தனது வீட்டில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவரைத் தொடர்ந்து, 4 கார்கள் பின்னால் வந்தன. விஜய் காருக்கு முன்பு ஒரு கார் மட்டும் சென்றது. விஜய் பயணித்த கார் எண் 1111 ஆகும். நியூமராலஜியில் 1111 என்பது ஏஞ்சல் எண் ஆகும். அந்த எண்ணை பயன்படுத்தினால், வெற்றி நிச்சயம் என்று அர்த்தமாகும்.

Similar News

News December 7, 2025

போதை பொருள் வழக்கில் தயாரிப்பாளர் கைது

image

போதை பொருள் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைதாகியுள்ள சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் அளித்த தகவலின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேறு பிரமுகர்களுக்கு தினேஷ் போதைப்பொருள் விற்றுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. தனுஷின் அக்கா மகன் பவேஷ் நடிப்பில் ‘லவ் ஓ லவ்’ என்ற படத்தை தினேஷ் ராஜ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News December 7, 2025

நாங்கள் மாமன், மச்சானாக பழகுகிறோம்: நயினார்

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாளுக்கு நாள் அரசியல் கருத்துகள் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், தி.குன்றத்தில் தீபம் ஏற்றுவதால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று நயினார் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களோடு நாங்கள் மாமன், மச்சானாக பழகுகிறோம் என்ற அவர், CM வேண்டுமானால் அங்காளி, பங்காளி என சொல்லலாம் என்றார். இந்த விவகாரத்தில் ஸ்டாலினை நினைத்து வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்.

News December 7, 2025

எந்த மரம் அதிகளவில் ஆக்சிஜன் கொடுக்கிறது?

image

மனிதன் உயிர்வாழ மரங்கள் ஆக்சிஜனை வழங்குகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த மரம் அதிக ஆக்சிஜனை வழங்குகிறது என தெரியுமா? ஆலமரம் தான் இந்த சிறப்பான காரியத்தை செய்கிறது. குறிப்பாக இரவில் அதிக ஆக்சிஜனை அவை வெளியிடுகின்றன. இதற்கடுத்து அரசமரமும், வேப்பமரமும் அதிக ஆக்சிஜனை கொடுக்கின்றன. நீங்களும் ஒரு மரத்தை நட்டு, வரும் சந்ததியினருக்கு உதவுங்கள். SHARE IT.

error: Content is protected !!