News August 19, 2024
நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார் விஜய்

தவெக கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.22ல் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடியை அவர் அறிமுகம் செய்கிறார். இதற்காக அங்கு 40 அடி உயரத்தில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, செப்டம்பரில் விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது.
Similar News
News March 25, 2026
வீரப்பனின் மகள், மனைவி ஒரே தொகுதியில் போட்டியா?

வீரப்பனின் மனைவி, மகள் இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிட உள்ளதாக பேச்சு எழுந்தது. இது தொடர்பாக பேசிய வீரப்பனின் மகளும் நாதக வேட்பாளருமான திவ்யா, தனது தாய் அருகில் உள்ள வேறொரு தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியிலிருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தளி (அ) பென்னாகரம் தொகுதியில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி களமிறங்க வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.
News March 25, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 25, 2026
கமல் செய்தது தியாகம் அல்ல, கடமை: திருமா

நெருக்கடியான சூழலில் ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது என திருமா பதிவிட்டுள்ளார். <<19467680>>தேர்தலில் போட்டியில்லை<<>> என கமல் அறிவித்தது காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் என்ற அவர், இது அவரது அறிவுமுதிர்ச்சியையும், பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது என்றார். மேலும், நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு கமல் இதை செய்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.


