News April 7, 2024
ரஞ்சித் விமர்சனத்திற்கு விஜய் ஆண்டனி பதிலடி

பெண்களின் உடையை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடு என நடிகர் ரஞ்சித் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி, மகிழ்ச்சியாக இருக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம். அது அடுத்தவரை பாதிக்காத அளவில் இருந்தால் போதுமானது என்றார். பெண்கள் அரைகுறை ஆடை அணிவதை பார்க்க முடியாவிட்டால் கண்களை மூடிக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News March 25, 2026
234 தொகுதியிலும் மார்ச் 30 வேட்பு மனு தாக்கல்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில், நாதக சார்பில் 234 தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் மார்ச் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, பிப்ரவரி மாதம் திருச்சி மாநாட்டில், 117 ஆண்கள், 117 பெண்கள் என மொத்தம் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து தற்போது வேட்புமனு தாக்கலும் ஒரே நாளில் நடைபெற உள்ளது.
News March 25, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 25, பங்குனி 11 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சப்தமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News March 25, 2026
காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை: EPS

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்குவது கவனம் ஈர்த்துள்ளது. ஏற்கெனவே 2021-ல் இதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் இதனை தற்போது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 2025-ல் HC இந்த உத்தரவை தலைமைக்காவலர் வரை முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டது.


