News October 25, 2024
துப்பறியும் போலீசாக நடிக்கும் விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘ககன மார்கன்’ எனப் படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இப்படம் புலனாய்வு கதைக்களத்தில் கிரைம் திரில்லராக இருக்குமெனக் கூறப்படுகிறது. மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில், லியோ ஜான் பால் இயக்கும் இப்படம் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் சமுத்திரக்கனி, பிரிகிதா சாகா, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Similar News
News January 12, 2026
பிரபல நடிகர் காலமானார்… REASON!

பிரபல பாடகரும் நடிகருமான பிரஷாந்த் தமாங்(43) <<18826872>>மரணத்துக்கான<<>> காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இரவு படுக்கைக்கு செல்லும் வரை ஆக்டிவாகவே இருந்த பிரஷாந்த், உறக்கத்தில் இருந்து காலையில் விழிக்கவே இல்லை என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். பதறிப்போய் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றபோது, ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இளம்வயது மாரடைப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.#RIP
News January 12, 2026
விஜய்யிடம் விசாரணை நிறைவு

டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் நடத்தப்பட்ட முதல் நாள் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. 4 அதிகாரிகள் விஜய்யிடம் தனித்தனியாக சுமார் 4.15 நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கரூரில் மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பரப்புரையை நிறுத்தவில்லை, கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஏன் என்பன உள்பட பல்வேறு கேள்விகளுக்கு விஜய் விளக்கமளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 12, 2026
தங்கம் விலை மொத்தம் ₹4,160 உயர்ந்தது

சர்வதேச சந்தை எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஜன.3-ம் தேதி சவரனுக்கு ₹1,00,800-ஆக இருந்த தங்கம் விலை இன்று ₹1,04,960-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9 நாளில் மட்டும் சுமார் ₹4,160 அதிகரித்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை சுமார் ₹30,000 உயர்ந்துள்ளது.


