News January 10, 2025
சினிமாவை விட்டு விலகும் விஜய், அஜித்

சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய், அஜித் இருவரும் துறையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுவது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. விஜய் கட்சி தொடங்கிவிட்டதால், இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். அஜித் கார் ரேஸ்களில் ஆர்வம் காட்டுவதால் சில மாதங்கள் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனால், தமிழ் சினிமாவின் தன்மை மாறவுள்ளது. நீங்க என்ன நினைக்குறீங்க?
Similar News
News January 16, 2026
ELECTION: ராமதாஸ் முன் உள்ள 3 வாய்ப்புகள் இதுதான்!

NDA கூட்டணியில் அன்புமணி சேர்ந்துவிட்டதால், ராமதாஸுக்கு இன்னும் 3 வாய்ப்புகளே உள்ளன. 1.திமுக அல்லது தவெக கூட்டணியில் சேர்ந்து அன்புமணி தரப்புக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்குவது. 2. தனித்து களம் காண்பது. 3.அன்புமணியை சமாதானப்படுத்தி அதிமுக அணியில் ஒற்றை இலக்க தொகுதிகளை பெறுவது. வரும் தேர்தலில் எந்த அணி அதிக MLA-க்களை வெல்லுமோ, அந்த அணியே பாமகவை கைப்பற்றும் என கூறப்படுகிறது.
News January 16, 2026
மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரம் இதுதான்

உழவுத் தொழிலில் விவசாயிகளுக்கு துணைநிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்ளும் பொங்கல் வைக்கலாம். மேலும், அந்த பொங்கலை மாட்டிற்கு கொடுத்து வழிபாடு செய்வது சிறப்பு. வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தி பகவானை வழிபடலாம்.
News January 16, 2026
தேர்தல் வரும்போது மட்டும் தமிழர்கள் நினைப்பு: கனிமொழி

பொங்கலை முன்னிட்டு PM மோடியும், அமித்ஷாவும் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தேர்தல் வரும்போது மட்டும் தமிழர்களை பற்றியும், தமிழ் பண்டிகைகளை பற்றியும் மத்திய அரசுக்கு நினைவு வருவதாக கனிமொழி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைப்பவர்களைத் தமிழர்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை எனவும், அவர்களை பற்றி பேசுவதில் பயனில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


