News September 3, 2025

இளையராஜா விழாவில் விஜய், அஜித்?

image

செப்.13-ல் தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இந்நிகழ்வில் ரஜினி, கமல், மற்ற திரையுலக ஜாம்பவான்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டில் இருக்கும் CM ஸ்டாலின், தமிழகம் திரும்பிய பிறகு இவ்விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதற்கு திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விஜய், அஜித் பங்கேற்பார்களா?

Similar News

News September 4, 2025

விசிகவை திமுகவே விழுங்கிவிடும்: EPS

image

பட்டியலின மக்களை அவமதிக்கும் கட்சிதான் திமுக என EPS சாடியுள்ளார். மதுரை பரப்புரையில் பேசிய அவர், இந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ள விசிகவின் கொடிக்கம்பங்களை நட விடாமல் திமுக அரசு தடுப்பதாக குற்றஞ்சாட்டினார். இதைக் கூறினால் நாங்கள் (அதிமுக) கூட்டணியை உடைப்பதாக பேசுகின்றனர் என்றார். மேலும், நாங்கள் கூட்டணியை உடைக்க மாட்டோம், திமுகவே மெல்ல மெல்ல விசிகவை விழுங்கிவிடும் என்று காட்டமாக தெரிவித்தார்.

News September 4, 2025

மனதை மயக்கும் மமிதா பைஜு லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

image

இளம் மஞ்சள் நிற நிலவாக ஒளிரும் மமிதா பைஜு, தனது லேட்டஸ்ட் போட்டோஸை வெளியிட்டு, ரசிகர்களை ஹார்ட்டின்களை பறக்கவிட வைத்துள்ளார். மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் ஜொலித்த அவர், தற்போது விஜய், சூர்யா, தனுஷ், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்து கவனம் ஈர்த்துள்ளார். ஜனநாயகன், சூர்யா 46, Dude ஆகியவை அவரது லைன் அப்களாக உள்ளன. உங்களுக்கு மமிதா நடித்ததில் பிடித்த படம் எது?

News September 4, 2025

பெண் SP-ஐ பொமேரியன் நாய் என விமர்சித்த பாஜக MLA

image

பெண் எஸ்.பி.,யை ‘பொமேரியன் நாய்’ என கூறியதற்காக கர்நாடக பாஜக MLA ஹரீஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சமீபத்திய நிகழ்வில் பேசிய அவர், MLA-வான என்னை பார்த்தாலே முகத்தை திருப்பிக்கொள்ளும் SP, ஷாமனூர் குடும்ப உறுப்பினர்களுக்காக வாசலில் பொமேரியன் நாய் போல் காத்திருக்கிறார் என்று சர்ச்சையாக பேசினார். மூத்த காங்., தலைவரான ஷாமனூர் சங்கரப்பா ஒரு MLA, அவரது மகன் அமைச்சர், மருமகள் MP என உள்ளனர்.

error: Content is protected !!