News August 16, 2025

விறுவிறுப்படையும் தவெக மாநாட்டுப் பணிகள்

image

ஆக.21-ல் மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு, தூய்மைப் பணிகள், மகளிர் பாதுகாப்பு, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட 9 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பறை, ஆகியவை அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Similar News

News March 23, 2026

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

image

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, தூத்துக்குடி, அரியலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று லேசான மழை பதிவானது.

News March 23, 2026

மாணவர்கள் தற்கொலையை தடுக்க புதிய கொள்கை

image

மாணவர்​களின் மனநலம் பாது​காப்​பு, தற்​கொலை தடுப்​புக்கு TN அரசு புதிய கொள்​கையை வெளி​யிட்​டுள்ளது. பள்​ளி, கல்​லூரி​களில் மனநல ஆலோ​சகர்​கள், ஆலோ​சனை மையங்​கள் மூலம் மாணவர்​களின் தனித் திறனை ஊக்​கு​விப்​பதுடன், நண்​பர்​கள் இடையே ஒருவருக்கு ஒரு​வர் உதவி செய்​து​கொள்​ளும் நல்​ ஆதரவு நடவடிக்​கைகளை தொடங்க வலியுறுத்தியுள்ளது. மனநல ஆலோ​சனைகளுக்கு 14416, 14417, 104, 1098, 181 எண்​களில் தொடர்பு கொள்ளலாம்.

News March 23, 2026

இதற்கா கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறீர்கள்?… நயினார்

image

கடலூர் GH-ல் மின்சாரம் இல்லாமல் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தது திமுக அரசின் நிர்வாக தோல்விக்கான சான்று என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கற்காலம் போன்று சிகிச்சை அளிக்கவா ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படுகிறது என்றும், திமுக அரசின் ஈயம் பூசும் வேலையை தமிழக மக்கள் இனி துளியும் நம்ப மாட்டார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!