News April 26, 2024

மம்மூட்டியின் நடிப்பைப் பாராட்டிய வித்யா பாலன்

image

‘காதல் தி கோர்’ படத்தில் மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து வியந்த நடிகை வித்யா பாலன், பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். தன்பால் ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் நடித்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாகத் தெரிவித்த அவர், துல்கர் சல்மானுக்கு மெசேஜ் செய்து தந்தையிடம் தனது பாராட்டைத் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.

Similar News

News April 2, 2026

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

image

வணிக சிலிண்டர்கள் விலை உயர்வைத் தொடர்ந்து வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையும் உயரும் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில், நாடு முழுவதும் வீட்டு உபயோக LPG சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், ஹிந்துஸ்தான், சிலிண்டர்கள் விநியோகம் சீராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.

News April 2, 2026

ஒரு திமுககாரன் கூட வந்து பாக்கல… குமுறும் ஆ.ராசா

image

திமுக நிர்வாகியிடம் ஆ.ராசா MP பேசுவதாக ஒரு ஆடியோ SM-ல் வைரலாகிறது. அதில், ‘நான் ஜெயில்ல இருந்தப்ப ஒரு திமுக MLA, MP கூட வந்து பாக்கல… 2 மாசம் கழிச்சி கனிமொழி அரெஸ்டாகி வந்தப்போ எல்லாரும் படையெடுத்து வந்தாங்க. அப்போ அழகிரி, ‘கலைஞர் டிவி பிரச்னைக்கு ஸ்டாலின் தான காரணம், அவர் பேர சொல்லிட்டு நீங்க 2 பேரும் வெளிய வந்துடறது தானேன்னு சொன்னாரு’ என்று சொல்வதாக உள்ளது. இதன் உண்மைத்தன்மை உறுதியாகவில்லை.

News April 2, 2026

வங்கி கணக்கில் ₹5,000.. வந்தாச்சு HAPPY NEWS

image

அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்துக்கான ஓய்வூதியத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், லட்சக்கணக்கான பயனாளிகளின் வங்கி கணக்கில் ₹1,000 முதல் ₹5,000 வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 18 முதல் 40 வயது வரையான வருமான வரி கட்டாத சேமிப்பு கணக்குதாரராக இருந்தால் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப 60 வயதுக்குபின் ஓய்வூதியம் கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!