News September 30, 2025
ஹோ.. இப்படித்தான் Bullet Proof ஜாக்கெட் வேலை செய்யுதா!

துப்பாக்கி புல்லட்களை எப்படி Bullet Proof ஜாக்கெட்கள் தடுக்கின்றன என்பது தெரியுமா? ஒரு Bullet Proof ஜாக்கெட்டில், Ceramic, Aramid Fiber, Vertex & Poly- etheleyne என 4 லேயர்கள் இருக்கும். முதல் லேயர் புல்லட்டின் வேகத்தை குறைக்கும். 2-வது லேயர் புல்லட்டின் மொத்த எனர்ஜியையும் Absorb செய்து கொள்ளும். 3-வது & 4-வது லேயர்கள் புல்லட் உடம்பில் படாமல் தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டவை.
Similar News
News March 4, 2026
விவசாயிகளை தேடி வரும் அரசு திட்டம்

வேளாண் நலத்துறையின் அனைத்து திட்டங்களையும் அதன் பயனையும் நேரடியாக விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்கிறது உழவரைத் தேடி வேளாண்மை திட்டம். இதன் கீழ், விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது & 4-வது வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடக்கும். விவசாயிகளே, உங்களுக்கு சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். SHARE.
News March 4, 2026
ஓவர் ஸ்பீடு.. தோனிக்கே ஷாக்!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பைக்கில் வேகமாக சென்றதற்காக Ex. கேப்டன் தோனிக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பைக் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கும் தோனி, தன்னுடைய வீட்டில் மிகப்பெரிய பைக் கலெக்ஷனே வைத்திருக்கிறார். தோனியாக இருந்தாலும் விதிமீறலுக்கு அபராதம் விதித்ததை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
News March 4, 2026
முதல்முறையாக இந்த Point-ஐ விஜய் பேசவில்லை..

இதுவரை நடந்த அனைத்து கூட்டங்களிலும், TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசிவந்தார் விஜய். அத்துடன் தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பலமுறை வாக்குறுதியும் கொடுத்துள்ளார். இந்நிலையில், முதல்முறையாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பாயிண்ட்டை தஞ்சை கூட்டத்தில் பேசாமல் ஸ்கிப் செய்திருக்கிறார் விஜய். இது ஏன் என பலரும் கேட்டு வருகின்றனர். உங்கள் கருத்து?


