News April 18, 2025
வீடியோ காலில் BF.. கணவருக்கு 36 முறை கத்தி குத்து!

ம.பி.யில் 17 வயது சிறுமி, தனது கணவரை(25)‘சதக்… சதக்’ என 36 முறை கொடூரமாக குத்தி கொன்றுள்ளார். தனது காதலனின் 2 நண்பர்களுடன் சேர்ந்து இப்பிளானை அச்சிறுமி தீட்டியுள்ளார். வீடு திரும்பும்போது, தலையில் பீர் பாட்டிலால் அடித்து, பின்னர் 36 முறை மாறி, மாறி குத்திக் கொலை செய்துள்ளனர். நிகழ்ந்த இந்த கொடூரத்தை தனது காதலனுக்கு வீடியோ காலில் காட்டியுள்ளார் அச்சிறுமி. தற்போது 4 பேரும் கைதாகி இருக்கின்றனர்.
Similar News
News September 19, 2025
BREAKING: இபிஎஸ் பரப்புரையில் மீண்டும் மாற்றம்

EPS-ன் தேர்தல் பரப்புரையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை(செப்.20) மற்றும் நாளை மறுநாள்(செப்.21) ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த சுற்றுப்பயணங்கள் அக்.4, 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த தேதிகளில் அவர் நாமக்கல் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்ளவிருந்தார். கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் சுற்றுப்பயணங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
News September 19, 2025
சிக்கன் விலை மளமளவென குறைந்தது

நாமக்கல் சந்தையில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹12 குறைந்துள்ளது. இதனால், கறிக்கோழி கிலோ ₹111-க்கும், முட்டைக்கோழி கிலோ ₹107-க்கும் விற்பனையாகிறது. முட்டை ₹5.25 காசுகளாக நீடிக்கிறது. இதனால், சில்லறை விற்பனையில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற நகரங்களில் சிக்கன் விலை சரிந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் நுகர்வு குறைவாக இருக்கும் என்பதால் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
News September 19, 2025
அதிக வருமான வரி கட்டும் நடிகர்கள்.. டாப்பில் விஜய்!

ஒவ்வொரு குடிமகனும் ஆண்டு வருமானத்திற்கேற்ப வரி கட்டுவது அவர்களின் கடமை. அப்படி திரையுலகில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்களில் அதிகம் வரி செலுத்துபவர்கள் யார் என தெரியுமா? அறிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை Swipe செய்யவும். இத்தகவல் நன்றாக இருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.