News March 3, 2025

ரஞ்சி கோப்பையை தட்டி தூக்கிய விதர்பா அணி

image

3ஆவது முறையாக ரஞ்சி கோப்பையை விதர்பா அணி வென்றுள்ளது. நாக்பூரில் நடந்த இறுதி ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் விதர்பா 379 ரன்களும், கேரளா 342 ரன்களும் எடுத்தன. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில், விதர்பா 9 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்தது. 2ஆவது இன்னிங்ஸ் முடியாததால், ஆட்டம் டிராவில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் 37 ரன்கள் முன்னிலை பெற்றதால், அந்த அணி கோப்பையை கைப்பற்றியது.

Similar News

News April 4, 2026

IPL TOSS: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

image

MI-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உடல்நல குறைவால் இன்றைய போட்டியில் பாண்ட்யா பங்கேற்காததால், சூர்யகுமார் MI கேப்டனாக செயல்படுகிறார். மேலும், தீபக் சஹார், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் களம் காண்கின்றனர். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரு அணிகளும் 13 முறை மோதியுள்ள நிலையில், அதிகபட்சமாக DC 7 முறை வென்றுள்ளது.

News April 4, 2026

அண்ணாமலைக்கு பொறுப்பு.. பாஜக புதிய அறிவிப்பு

image

பாஜக வேட்பாளராக களமிறங்காத அண்ணாமலை, NDA கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் என கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெயர் பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர் தவிர, சரத்குமார், குஷ்பு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும், டெல்லி, உ.பி., ம.பி., குஜராத், மகாராஷ்டிரா & அசாம் ஆகிய 6 மாநில பாஜக CM-களும் தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்கின்றனர்.

News April 4, 2026

4 பேர் போதையில்… ஷகீலா என்ன செய்தார் தெரியுமா?

image

நடிப்பில் மட்டுமல்ல, செயலிலும் நடிகை ஷகீலா ரொம்பவே போல்டு தான். மலையாளப் பட ஷூட்டிங்கின் போது, முன்பு ஒருமுறை அவர் தங்கியிருந்த ரூமுக்கு எதிரே பயங்கர சத்தம் கேட்டுள்ளது. வெளியில் சென்று பார்த்தால், 4 பேர் போதையில் நடிகை ரூபா இருந்த ரூமில் அசிங்கமாக பேசி கலாட்டா செய்துள்ளனர். இதை ஷகீலா தட்டிக்கேட்க ஒருவன் அவரை அடித்துவிட்டான். சற்றும் தயங்காத ஷகீலா அவனை திருப்பியடிக்க பெரும் பிரச்னையாகிவிட்டதாம்.

error: Content is protected !!