News June 7, 2024

காங்கிரஸுக்கு வெற்றி, மோடிக்கு தோல்வி: ப.சிதம்பரம்

image

தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளுக்கும் படிப்பினை என காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி தங்களுக்கு படிப்பினையாக இருப்பதாக கூறினார். மேலும், காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்திருப்பதாகவும், தோல்வி மோடிக்கு தான் என்றும் தெரிவித்த அவர், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்றார்.

Similar News

News August 9, 2025

SPORTS ROUND-UP: கைவிடப்படும் ISL?

image

★சின்சினாட்டி ஓபன்: முதல் சுற்றில் 4- 6, 4- 6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஜெசிகாவிடம் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி.
★ZIM-க்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2-வது நாளில் NZ 601/ 3 குவிப்பு. நிக்கோல்ஸ் 150*, ரச்சின் 165* ரன்கள் குவிப்பு.
★பணப்பிரச்னையால் முடங்கிய ISL: இந்த ஆண்டு நடக்காது எனவும் தகவல்.
★சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ்: 2-வது சுற்றில் அர்ஜூன் எரிகைசி நெதர்லாந்தின் ஜோர்டென் வானுடன் டிரா செய்தார்.

News August 9, 2025

‘கூலி’ இண்டர்வெல் செம ஷாக்கிங்கா இருக்குமாம்!

image

‘கூலி’ இண்டர்வெல் பிளாக் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுவரை யாரும் இப்படி ஒரு இடைவேளை காட்சியை வைக்க முயற்சி செய்யவில்லை எனவும், அதை தான் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. வரும் 14-ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளது.

News August 9, 2025

புதிய வரிவிதிப்புகளால் கோடி கோடியாக பணம்: டிரம்ப்

image

புதிய வரிவிதிப்புகளால் அமெரிக்கா பயனடைந்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் பங்குச்சந்தைகள் உச்சத்தை அடைந்து, கோடிக்கணக்கான பணம் நாட்டிற்கு வருவதாகவும், புதிய வரிவிதிப்புகளுக்கு கோர்ட் தடை போட்டால், அது 1929 Great depression நிலைக்கு நாடு சென்றுவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமது நாட்டிற்கு வெற்றியும், மகத்துவத்துமும் தான் தேவை, தோல்வி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!