News September 8, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் எம்.பி.க்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகள் எடுத்துரைக்கப்படும். தேர்தலில் NDA சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 8, 2025
அதிமுக 210 இடங்களில் வெற்றி: EPS திட்டவட்டம்

2026 தேர்தலில் ADMK – DMK இடையேதான் போட்டி என கூறியுள்ள EPS, அதிமுக 210 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்தார். PTI நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்த அவர், DMK ஆட்சியில் நிறுத்தப்பட்ட, அதிமுக ஆட்சியின் நலத் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம் என்றார். மேலும், வெளிநாடு சென்றுள்ள CM ஸ்டாலின், முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News September 8, 2025
டிரம்பை சந்தித்த இந்தியாவின் பிரசார தூதர்!

USA அரசில் இந்திய நலன்களை பாதுகாக்கும் வகையில் பிரசார தூதரான SHW பார்ட்னர்ஸ் LLC-ன் தலைவர் ஜேசன் மில்லர், டிரம்பை சந்தித்து பேசினார். இந்தியாவுக்கு 50% விதிக்கப்பட்ட பிறகு நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே PM மோடி, டிரம்ப் இருவரும் பரஸ்பரம் இருநாட்டு நட்பு குறித்து பதிவிட்டிருந்த நிலையில், வரி விதிப்பு பிரச்னை விரைவில் முடிவுக்கு வரலாம் என கூறப்படுகிறது.
News September 8, 2025
இந்திய கிரிக்கெட்டின் பிரின்ஸ் அவதரித்த நாள்

Under 19 WC-ல் துணை கேப்டனாக கோப்பையை தூக்கிய சுப்மன் கில்லுக்கு, அதில் இருந்து ஏறு முகம்தான். சில விமர்சனங்கள் இருந்தாலும், இப்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்த்து நிற்கிறார். ‘The flat track bully’ என விமர்சிக்கப்பட்ட கில், இங்கிலாந்தில் தன் பேட்டால் பதிலடி கொடுத்தார். பேட்ஸ்மேனாக தடம் பதித்த கில் விரைவில் கேப்டனாகவும் சாதிப்பார் என நம்பலாம். பிரின்ஸ் கில்லுக்கு HBD வாழ்த்துகள்.